ETV Bharat / state

ஃபோர்டு ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை - அமைச்சர் அன்பரசன் - ஃபோர்டு நிறுவனம்

ஃபோர்டு நிறுவனம் தற்போதுவரை மூடப்படவில்லை அடுத்த ஆண்டுதான் மூடுவதாக அறிவித்துள்ளனர். எனவே அதற்கு முன்பாக அங்குப் பணியாற்றும் ஊழியர்கள், அந்நிறுவனத்திற்கு நேரடி உதிரிபாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

ford
ford
author img

By

Published : Sep 23, 2021, 8:09 AM IST

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் தன்னுடைய உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஏற்கனவே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகத்தில், ஃபோர்டு நிறுவனத்திற்கு நேரடி உதிரிபாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களுடன் (டயர் - 1) தா.மோ. அன்பரசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த அன்பரசன் கூறுகையில், "செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கிவரும் ஃபோர்டு நிறுவனம் நஷ்டத்தில் இருப்பதால் அதனை மூட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் அதற்கு உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் 50-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் தரப்பிலிருந்து வைத்துள்ளனர். எனவே அரசின் மூலமாகச் சில சலுகைகள் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதனை முதலமைச்சரிடம் கூறி, அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை எடுப்போம். 74 நிறுவனங்கள் சென்னை புறநகர்ப் பகுதிகளில் ஃபோர்டு நிறுவனத்திற்கு சப்ளை செய்கின்றனர்.

சில நிறுவனங்கள் முழுவதுமாகவும், 90 விழுக்காடு நிறுவனங்கள் 30-40 விழுக்காடு ஃபோர்டு நிறுவனத்திற்கு சப்ளை செய்கின்றனர். இது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். ஃபோர்டு நிறுவனம் மூடப்படவில்லை, இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

அடுத்த ஆண்டு நிறுவனம் மூடப்படுவதாக அறிவித்துள்ளதால், அதற்கு முன்பாக அங்கு வேலை செய்பவர்கள் யாரும் வேலை இழப்புக்கு ஆளாகாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். ஃபோர்டு நிறுவனக் கட்டமைப்பை மற்ற நிறுவனம் எடுத்து நடத்துவது தொடர்பாக தொழில் துறை ஆலோசனை நடத்திவருகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.