ETV Bharat / state

ஆன்லைன் வகுப்புகளில் பாலியல் புகார்: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பள்ளிக் கல்வித் துறை
பள்ளிக் கல்வித் துறை
author img

By

Published : Jun 21, 2021, 3:13 PM IST

Updated : Jun 21, 2021, 8:57 PM IST

15:07 June 21

சென்னை: பள்ளிக் குழந்தைகள் மீது பாலியல் ரீதியான தொந்தரவு, வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்தும், இணையவழி(ஆன்லைன்) வகுப்புகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து மாநில அரசின் அறிவுறுத்தலின்பேரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. புகார்கள் பெறப்பட்ட பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில் பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளுக்குப் பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருப்பதற்கு, சரியான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படாததே முக்கிய காரணம் என்று கல்வியாளர்கள், பெற்றோர் தெரிவித்தனர். 

இவ்விவகாரம் தொடர்பாக கல்வித்துறை அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இணையவழி வகுப்புகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இப்புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி வாரியங்களின் கீழுள்ள பள்ளிகள் அனைத்திற்கும் பொருந்தும்.

மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு

மாணவர்கள் பாதுகாப்பைத் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யவும், அது சார்ந்த நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்யும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு ஒவ்வொரு பள்ளியிலும் அமைக்கப்படும்.  

இந்தக் குழுவில் பள்ளி தலைமை ஆசிரியர் இருவர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் இருவர், பள்ளி நிர்வாக உறுப்பினர் ஒருவர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் தேவைக்கு ஏற்ப பள்ளி சாரா வெளி நபர் ஒருவர் என, உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுவர்.

மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை

மாநில அளவில் ஒரு கட்டுப்பாட்டு அறையை பள்ளிக் கல்வித்துறை ஒரு மாத காலத்திற்குள் உருவாக்கும். அனைத்து தரப்பினரும் தங்களது குறைகளை எளிதாக தெரிவிக்கும் வகையில், இந்த மையத்தில் கட்டணமில்லா நேரடி தொலைபேசி எண் மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் வசதி உருவாக்கப்படும்.

மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு, தங்களுக்கு வரும் எந்தப் புகாரையும் உடனடியாக மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இந்த மையம் புகார்களைப் பதிவு செய்வது மட்டுமின்றி, அது சார்ந்து பின்பற்ற வேண்டிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு வழங்கும்.

மாநில கட்டுப்பாட்டு மையத்தில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல்துறை வல்லுனர் நியமனம் செய்யப்படுவர். இந்த மையத்தில் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் ரகசிய தன்மையுடன் பாதுகாக்கப்படும்.

பள்ளிகளைச் சார்ந்த அனைத்து அங்கத்தில் இருக்கும் போக்சோ சட்டத்தில் குறிப்பிட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த முழு புரிதல் உண்டாகும் வகையில், வருடந்தோறும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான விழிப்புணர்வு புத்தகம் பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கி வழங்கப்படும்.

பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும், சுய தணிக்கை செய்வதை உறுதி செய்யவும், பள்ளிக் கல்வித்துறையால் புத்தகம் வழங்கப்படும்.

ஆன்லைன் வகுப்பு முழுவதும் பதிவு

ஆன்லைன் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை முழுமையாக பதிவு செய்வதோடு, பதிவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை சேர்ந்தவர்கள் தொடர் ஆய்வு செய்ய வேண்டும்.

புகார் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை எளிதாக தெரிவிப்பதற்காக பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும். மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை ஆய்வு செய்து, தக்க நடவடிக்கை எடுக்கும்.

மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு பள்ளியில் பெறப்பட்ட அனைத்து புகார்களையும் பதிவு செய்ய தனியாக ஒரு பதிவேட்டை பராமரிக்கும். வாய்மொழி உட்பட புகார் எந்த முறையில் பெறப்பட்டு இருந்தாலும், புகார் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 முதல் நவம்பர் 22 வரை குழந்தைகள் துன்புறுத்தலை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இப்புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ஆணையர், பள்ளிக்கல்வித்துறை(குழுத் தலைவர்), இயக்குநர் கல்லூரி கல்வித்துறை(உறுப்பினர்), கணினி குற்றத்தடுப்பு பிரிவு-சைபர் கிரைம்(காவல்துறை அலுவலர் உறுப்பினர்), பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய பிரிவு(காவல்துறை அலுவலர் உறுப்பினர், இரு கல்வியாளர்கள்(உறுப்பினர்கள்) இரு உளவியல் நிபுணர்கள்/ குழந்தைகளிடையே பாலியல் தொந்தரவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் இருப்போர்/ தன்னார்வலர்கள்(உறுப்பினர்கள்) ஆகியோர் அடங்கிய குழு தயாரித்து தமிழ்நாடு அரசுக்கு அளித்துள்ளது.

இவற்றை தற்போது அரசு அங்கீகரித்து, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா அரசாணையாகப் பிறப்பித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு

Last Updated : Jun 21, 2021, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.