தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அரசு விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன. இந்தக் கட்டடங்களால் அவ்வுப்போது, விபத்து, முறைகேடு உள்ளிட்டவைகள் நடைபெறுவதால், மாநிலம் முழுவதும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை கணக்கெடுத்து, அதன் உரிமையாளர்களுக்கு வரன்முறைச் செய்ய உத்தரவிட்டது.
அதன்படி மாநிலம் முழுவதும் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு காலஅவகாசம் வழங்கப்பட்டது. ஆனாலும் இதுவரை பல கட்டடங்கள் வரன்முறைப்படுத்தப்படாததால், கூடுதலாக ஆறுமாத காலஅவகாசத்தை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.