இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாளை முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள், தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் ஆகியவை மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், துறைமுகங்கள், விமான நிலையங்கள், சரக்கு கிடங்குகள், தொலைத் தொடர்பு சேவைகள் அத்தியாவசியத் தரவு மையங்கள் பராமரிப்பு பணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணிக்குச் சென்றுவர ஏற்கெனவே இ-பதிவு முறையில் பதிவு செய்துள்ளார்கள்.
ஏற்கெனவே பதிவு செய்துள்ள வாகனங்களில் நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கு மட்டும் அனுமதி புதுப்பித்து வழங்கப்படும். இருசக்கர வாகனங்களில் பணியாளர்கள் சென்றுவர மே 25ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆதலால், இத்தொழிற்சாலைகள் தங்கள் பணியாளர்களை பணிக்கு அழைத்துவர நான்கு சக்கர வாகனங்களை ஏற்பாடு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இரு சக்கர வாகனங்களில் அனுமதிகளைத் தவிர மற்ற விலக்களிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான இ பதிவு தானாகவே புதுப்பிக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இ-பதிவு இல்லாமல் சென்ற வாகனங்கள் - திருப்பி அனுப்பிய காவல்துறை