ETV Bharat / state

முல்லை பெரியாறு..15 மரங்களை வெட்ட அனுமதி கோரி தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் மனு - முல்லை பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்துவதற்காக 15 மரங்களை வெட்ட அனுமதியை மீட்டுத் தருமாறு கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

முல்லை பெரியாறு அணை
முல்லை பெரியாறு அணை
author img

By

Published : Nov 16, 2022, 10:32 AM IST

Updated : Nov 16, 2022, 10:46 AM IST

முல்லைப் பெரியாறு அணையின் நீர் திறப்பு, பராமரிப்பு, கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேரள மாநிலங்கள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்நிலையில் அணையின் பலம், பாதுகாப்பு குறித்து கேரள அரசு தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இப்பிரச்னை உச்சநீதிமன்றம் சென்றது. இதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், 142 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்ததுடன் அணையை கண்காணிக்க மூவர் குழுவையும் நியமித்தது.

இருப்பினும் கேரள அரசு இன்று வரை தொடர்ந்து அணை குறித்து பல்வேறு சர்ச்சைகளை கூறி நிர்ணயித்த அளவிற்கு நீரை உயர்த்த விடாமல் செய்து வருகிறது. இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு 2014, 2015, 2018 ஆகிய மூன்று முறை மட்டுமே 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பெருமழை பெய்த போதும் 142 அடியை எட்டும் முன்பே அணை திறக்கப்பட்டது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணையை பலப்படுத்தும் நடவடிக்கைக்காக 15 மரங்களை வெட்ட கேரளாவிடம் அனுமதி கோரப்பட்டது. கேரள அரசு தரப்பில் இருந்து பேபி அணையில் 15 மரங்களை வெட்ட தமிழ்நாட்டிற்கு அனுமதி அளித்து கடிதம் அனுப்பப்பட்டது. அப்போது கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினார்.

ஆனால் தங்களை கேட்காமல் தமிழ்நாட்டிற்கு அனுமதி கொடுத்து வனத்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பிவிட்டனர் என கேரள அமைச்சர் சசீந்தரன் கூறினார். கேரள சட்டசபையில் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டது. அதனால் தமிழ்நாட்டிற்கு மரம் வெட்ட கொடுத்த அனுமதியை நிறுத்தி வைக்கிறோம் என்று கடந்த நவம்பர் மாதம் கேரள அரசு அறிவித்தது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்துவதற்காக 15 மரங்களை வெட்ட அனுமதியை மீட்டுத் தருமாறு கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இதையும் படிங்க: அனுமதி இன்றி வைக்கப்பட்ட சிலை! உடனடியாக அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Last Updated : Nov 16, 2022, 10:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.