ETV Bharat / state

வருமுன் காப்போம் திட்டத்திற்கு ரூ. 3.85 கோடி நிதி ஒதுக்கீடு - kalaingnar varum mun kaapom scheme

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு 3.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்
author img

By

Published : Sep 30, 2021, 7:30 PM IST

சென்னை: கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (செப். 30) சேலத்தில் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் நோக்கம் கிராமங்கள், நகர்ப்புறப் பகுதிகளுக்கு மருத்துவக் குழுவினர் சென்று முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்துவதாகும்.

இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள், ஆலோசனைகள் பின்வருமாறு:

  • ரத்த அழுத்தப் பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு பரிசோதனை
  • இசிஜி பரிசோதனை
  • கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை (PAP Smear)
  • கர்ப்பிணிகளுக்கு அல்ட்ராசோனாகிராம் பரிசோதனை
  • கண்புரை ஆய்வு மற்றும் பார்வைக் குறைபாட்டிற்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்குதல்
  • கரோனா தடுப்பூசி வழங்குதல்
  • குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு இதர தடுப்பூசி வழங்குதல்
  • கரோனா சம்பந்தமாக சளி பரிசோதனை செய்தல்
  • கரோனா நோய்த் தடுப்பு விழிப்புணர்வு
  • டெங்கு, பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையினர், இதய நோய் சிகிச்சை, கண், காது, மூக்கு, தொண்டை உள்பட 16 துறை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

முகாம்கள் குறித்து விளம்பரம்

அரசு மருத்துவர்களுடன் இந்திய மருத்துவச் சங்கம், ரோட்டரி, அரிமா சங்கங்கள், தன்னார்வ நிறுவனங்கள் இணைந்து இத்திட்டத்தில் செயல்படுவார்கள். கிராமம், நகரங்களில் முகாம்கள் அமைக்கப்படும் நாள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ள விளம்பரம் செய்யப்படும். பொதுமக்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொண்டு உயர் சிகிச்சை தேவைப்படுவோர்க்கு அரசு மருத்துவமனைகள் பரிந்துரை செய்யப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மருத்துவ இயக்குநர், பொது சுகாதாரத் துறை மூலம் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

மேலும், வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் ஒரு வட்டாரத்தில் மூன்று முகாம்கள் நடத்துவதற்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் 385 வட்டாரங்களுக்கு 3.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டிற்கு 1,155 மருத்துவ முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘தேர்தல் நடத்துவதில் தமிழ்நாடு முன்மாதிரியாக இருக்க வேண்டும்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.