இது குறித்து தமிழ்நாடு நிதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மூன்று ஆண்டு காலங்களுக்கு 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் வடிவிலான பிணைய பத்திரங்கள், 35 ஆண்டு காலங்களுக்கு 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் வடிவிலான பிணைய பத்திரங்கள் என, மொத்தம் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் வடிவிலான பிணைய பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள கோட்டை அலுவலகத்தில் ஜூன் 30ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும், போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் (Reserve Bank of India Core Banking Solution) (E-Kuber) System] ஜூன் 30ஆம் தேதிக்குள் இதற்கான மின்னணு படிவங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கரோனா தடுப்புப் பணியில் 50 வயதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்: ஜாக்டோ ஜியோ எதிர்ப்பு!