சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஆக.8) கரோனா குறித்த புள்ளி விவர தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 229 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் புதிதாக ஆயிரத்து 956 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 75 ஆயிரத்து 308 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையங்களில் 20 ஆயிரத்து 286 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 20 ஆயிரத்து 584 ஆக உள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 28 நோயாளிகள் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 317 ஆக உள்ளது.
சென்னையில் இன்று மேலும் 187 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . அதிகப்பட்சமாக கோவையில் 241 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 5,39,667
கோயம்புத்தூர் - 231170
செங்கல்பட்டு - 1,62,924
திருவள்ளூர் - 1,14,196
சேலம் - 94,059
திருப்பூர் - 88,520
ஈரோடு - 95,066
மதுரை - 73,672
காஞ்சிபுரம் - 72,033
திருச்சிராப்பள்ளி - 72,996
தஞ்சாவூர் - 68,712
கன்னியாகுமரி - 60,358
கடலூர் - 60,987
தூத்துக்குடி - 55,229
திருநெல்வேலி - 48,082
திருவண்ணாமலை - 52,435
வேலூர் - 48,247
விருதுநகர் - 45,598
தேனி - 43,008
விழுப்புரம் - 44,100
நாமக்கல் - 47,641
ராணிப்பேட்டை - 42,103
கிருஷ்ணகிரி - 41,571
திருவாரூர் - 38,191
திண்டுக்கல் - 32,292
புதுக்கோட்டை - 28,423
திருப்பத்தூர் - 28,378
தென்காசி - 26,908
நீலகிரி - 30,909
கள்ளக்குறிச்சி - 29,404
தருமபுரி - 26,332
கரூர் - 22,781
மயிலாடுதுறை - 21,250
ராமநாதபுரம் - 20,097
நாகப்பட்டினம் - 18,957
சிவகங்கை - 18,963
அரியலூர் - 15,968
பெரம்பலூர் - 11,555
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,018
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,080
ரயில் மூலம் வந்தவர்கள் 428
இதையும் படிங்க: 'கோவாக்சின், கோவிஷீல்டு கலவை - நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது'