தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 3) புதியதாக 5609 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 63 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து, 5,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 2 ஆயிரத்து283 ஆக உயர்ந்துள்ளது.
இன்று (ஆகஸ்ட் 3) ஒரே நாளில் 109 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 4,241 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 5 ஆவது நாளாக கரோனா பாதிப்பு 6 ஆயிரத்துக்கு கீழாகப் பதிவாகியுள்ளது. மேலும் கரோனா சிகிச்சைப் பெறுவோரைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக நிலவரம்
- சென்னை -1,02,985
- செங்கல்பட்டு -15,657
- திருவள்ளூர் -14,750
- மதுரை -11455
- காஞ்சிபுரம் -10095
- விருதுநகர் -8843
- தூத்துக்குடி -7846
- திருவண்ணாமலை -6660
- வேலூர் -6376
- தேனி -5969
- திருநெல்வேலி- 5641
- ராணிப்பேட்டை- 5852
- கோயம்புத்தூர் -5458
- கன்னியாகுமரி - 5307
- திருச்சிராப்பள்ளி -4517
- விழுப்புரம் -4112
- கள்ளக்குறிச்சி -3906
- சேலம்- 3868
- கடலூர் -3582
- ராமநாதபுரம் -3400
- தஞ்சாவூர் -3154
- திண்டுக்கல் -3066
- சிவகங்கை -2534
- புதுக்கோட்டை - 2471
- தென்காசி -2397
- திருவாரூர் -1799
- திருப்பத்தூர் -1278
- கிருஷ்ணகிரி -1170
- அரியலூர் -1045
- திருப்பூர் -994
- நீலகிரி -849
- நாகப்பட்டினம் -817
- நாமக்கல் -801
- தருமபுரி- 789
- ஈரோடு -767
- கரூர் - 579
- பெரம்பலூர் -543
பயணிகள் விவரம்
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 842
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 623
- ரயில் மூலம் வந்தவர்கள் 425
இதையும் படிங்க:ஒரத்தநாடு சட்டப்பேரவை உறுப்பினருக்குக் கரோனா