ETV Bharat / state

தமிழ்நாட்டில் 6 ஆயிரத்தை தாண்டிய கரோனா தொற்று பாதிப்பு! - சென்னை மாவட்ட செய்திகள்

tn-corona-update-today
tn-corona-update-today
author img

By

Published : May 8, 2020, 6:14 PM IST

Updated : May 8, 2020, 8:36 PM IST

18:11 May 08

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் உள்ள 52 ஆய்வகங்களில் 13 ஆயிரத்து 980 பேருக்கு சளி, ரத்தமாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 600 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை, 5,409லிருந்து, 6 ஆயிரத்து ஒன்பதாக உயர்ந்துள்ளது.  

இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரத்து 416 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டதில், 2 லட்சத்து ஒன்பதாயிரத்து 495 பேருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு ஆயிரத்து 605 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

4 ஆயிரத்து 360 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 58 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏப்ரல் 30ஆம் தேதி சேர்க்கப்பட்ட 78 வயது முதியவர், மே 6 ஆம் தேதி சேர்க்கப்பட்ட 56 வயது முதியவர் ஆகிய இருவரும், வெளி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6ஆம் தேதி சேர்க்கப்பட்ட 83 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இதுவரை தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  40 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 399 பேரும், திருவள்ளூரில் 75 பேருக்கும் , கடலூரில் 34 பேரும், செங்கல்பட்டில் 26 பேரும், விழுப்புரத்தில் 21 பேரும் , திருவண்ணாமலையில் 11 பேரும் , கன்னியாகுமரி மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 8 பேரும், திருநெல்வேலியில் 4 பேரும், விருதுநகரில் 3 பேரும், கிருஷ்ணகிரி, மதுரை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், ராமநாதபுரம் , தென்காசி, தேனி ,திருப்பத்தூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் என, மொத்தம் 600 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மாவட்ட வாரியாக பாதிப்பு விபரங்கள்

வரிசை எண்மாவட்டங்கள்பாதிப்பு
 சென்னை3,043
 கடலூர்390
3திருவள்ளூர்270
4அரியலூர்246
5விழுப்புரம் 226
6செங்கல்பட்டு184
7கோயம்புத்தூர்146
8மதுரை113
9திருப்பூர்112
10திண்டுக்கல்107
11காஞ்சிபுரம்97
12பெரம்பலூர்77
13நாமக்கல்76
14ஈரோடு70
15திருநெல்வேலி72
16திருவண்ணாமலை67
17தஞ்சாவூர்65
18திருச்சிராப்பள்ளி63
19கள்ளக்குறிச்சி58
20தேனி55
21தென்காசி52
22ராணிப்பேட்டை50
23கரூர்47
24நாகப்பட்டினம்45
25விருதுநகர்38
26சேலம்35
27திருவாரூர்32
28தூத்துக்குடி30
29வேலூர்29
30கன்னியாகுமரி25
31ராமநாதபுரம்24
32திருப்பத்தூர்23
33நீலகிரி13
34சிவகங்கை12
35கிருஷ்ணகிரி10
36புதுக்கோட்டை5
37தருமபுரி5

மேலும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 303 பேர், 60 வயதிற்குட்பட்ட 2 திருநங்கைகள் உட்பட 5, 282 பேருக்கும், 60 வயதிற்குட்பட்டவர்கள் 424 பேரும் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : May 8, 2020, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.