இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஆகஸ்ட் 25) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள மதுரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவ ஆய்வகம் ஒன்றுக்கு புதிதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 141 ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 67 ஆயிரத்து 888 நபர்களுக்கு புதிதாக பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்து 5 ஆயிரத்து 937 நபர்கள், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 14 நபர்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 951 நபர்களுக்கு வைரஸ் நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை 41 லட்சத்து 99 ஆயிரத்து 492 நபர்கள் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 3 லட்சத்து 91 ஆயிரத்து 303 நபர்கள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தற்போது 52 ஆயிரத்து 128 நபர்கள் தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 6 ஆயிரத்து 998 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 454ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், சிகிச்சை பலனின்றி 107 நபர்கள் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதில், 42 பேர் தனியார் மருத்துவமனையிலும், 65 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது மாநிலத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 721ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு நிலவரம்:
சென்னை - 1,27,949
செங்கல்பட்டு - 24,129
திருவள்ளூர் - 23,062
காஞ்சிபுரம் - 15,960
மதுரை - 13,590
கோயம்புத்தூர் - 12,467
விருதுநகர் - 12,049
தேனி - 11864
தூத்துக்குடி - 10,801
வேலூர் - 9,850
ராணிப்பேட்டை - 9,646
திருவண்ணாமலை - 9,626
கடலூர் - 9,525
கன்னியாகுமரி - 8,840
திருநெல்வேலி - 8,770
சேலம் - 8,511
திருச்சிராப்பள்ளி - 6,873
விழுப்புரம் - 6,398
திண்டுக்கல் - 5,990
தஞ்சாவூர் - 5,871
கள்ளக்குறிச்சி - 5,493
புதுக்கோட்டை - 5,372
தென்காசி - 4,926
ராமநாதபுரம் - 4,484
சிவகங்கை - 3,826
திருவாரூர் - 2,955
திருப்பத்தூர் - 2,617
ஈரோடு - 2,396
அரியலூர் - 2,334
திருப்பூர் - 2,143
நாகப்பட்டினம் - 2,105
கிருஷ்ணகிரி - 1,913
நாமக்கல் - 1,672
நீலகிரி - 1,473
கரூர் - 1,350
தருமபுரி - 1,149
பெரம்பலூர் - 1,203
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 899
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 794
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பா? வரும் 29ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை