இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் பாஜக அரசு அமைந்தவுடன் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது என காங்கிரஸ் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாத தமிழிசை சவுந்தரராஜன், அவசியமில்லாமல் முன்னாள் முதலமைச்சர் மன்மோகன் சிங் மீது விமர்சனங்களை முன் வைக்கிறார் என விமர்சித்துள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டில் நடந்த பேரழிவுகளில் மத்திய அரசு முழுவதுமாக துணை நின்றிருப்பதாகவும், நரேந்திர மோடியின் அரசு தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தமிழ்நாடு அரசின் உரிமைகளைத் தட்டிப் பறிக்கும் பாஜகவுக்கு எதிராக குரல் கொடுக்க, மடியில் கனம் இருப்பதால் தமிழ்நாடு அரசு தயாராக இல்லை என்றும், இதனால் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டு மிகப் பெரிய பாதிப்புக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.