ETV Bharat / state

உடலினை உறுதி செய் - முதலமைச்சரின் மாஸ் வொர்க்-அவுட் வீடியோ! - முதலமைச்சரின் மாஸ் வொர்க்-அவுட்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு பணிகளுக்கு இடையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் காணொலி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மு.க.ஸ்டாலின்
வொர்க்-அவுட்
author img

By

Published : Aug 21, 2021, 11:08 AM IST

Updated : Aug 21, 2021, 11:22 AM IST

தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன்முறையாகப் பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின், சென்ற 100 நாள்களில் மக்களைத் தேடி மருத்துவம், கரோனா நடவடிக்கைகள், நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

இந்நிலையில், தன் அன்றாடப் பணிகளுக்கு இடையில் உடல் ஆரோக்கியத்தையும் வழக்கம்போல் அவர் பேணிக்காத்து வருகிறார். எப்போதும் போலவே உடற்பயிற்சி செய்வதையும், சைக்கிளிங் செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார் ஸ்டாலின்.

அந்த வகையில், இன்று (ஆக. 21) காலை ஜிம்மில் ஸ்டாலின் வொர்க்-அவட் செய்யும் காணொலி வெளியாகி வைரலாகியுள்ளது. தனது 68ஆவது வயதிலும் உடற்பயிற்சியை விடாமல் செய்துவரும் ஸ்டாலினின் மன உறுதி இளந்தலைமுறையினருக்கு உத்வேகமாக விளங்குகிறது.

முதலமைச்சரின் மாஸ் வொர்க்-அவுட்

உடற்பயிற்சி செய்வதில் மிகவும் ஈடுபாடு கொண்ட ஸ்டாலின், பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் எளிய முறையிலான உடற்பயிற்சிகளை இந்தக் காணொலியில் மேற்கொள்கிறார்.

முன்னதாக இதேபோல் ஸ்டாலின் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கடுமையாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? - முதலமைச்சர் ஆலோசனை

Last Updated : Aug 21, 2021, 11:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.