ETV Bharat / state

'காவிரி வேளாண் மண்டலம் தொடர்பாக விரைவில் நல்ல அறிவிப்பு வரும்'- முதலமைச்சர் பழனிசாமி - assembly debate stalin and edapadi

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி வேளாண் மண்டலம்  டெல்டா பாதுகாப்பு மண்டலம்  தமிழ்நாடு சட்டப்பேரவை  எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் விவாதம்  assembly debate stalin and edapadi  cauvery delta spl zone
எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Feb 19, 2020, 2:22 PM IST

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் அவையின் கவனத்தை ஈர்த்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியபோது, "காவேரி சிறப்பு வேளாண் மண்டலமாக கடந்த 9ஆம் தேதி முதலமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பில் புதிதாக இனி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் எனக் குறிப்பிட்டார். ஆனால், இதற்கு முன்பு அனுமதி அளித்த ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக எதுவும் அறிவிக்கவில்லை.

அதே போன்று முதலமைச்சர் அறிவித்தது தொடர்பான கடிதத்தை மத்திய அமைச்சர்களைச் சந்தித்து கடந்த 10ஆம் தேதி அமைச்சர் ஜெயக்குமார் அளித்துள்ளார். அந்தக் கடிதத்தில்கூட இதற்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை, மக்களவையில் திமுக எம்பிக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆகவே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பாக சட்டமுன்வடிவைத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "சேலத்தில் நடைபெற்ற விழாவில் கடந்த 9ஆம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டேன். டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றும், வேளாண் மக்கள் தொடர்ந்து வைத்து வந்த கோரிக்கையை ஏற்றும் தலைவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண் மண்டலம் அமைக்கப்படும் என்று அறிவித்தேன். இதற்கான நல்ல அறிவிப்பு விரைவில் வரும்" என்றார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக சட்டமுன்வடிவு கொண்டு வர வேண்டும். இன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே சட்டப்பேரவை நடைபெற உள்ளது. இன்று மாலை கூட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வருகிறது. ஆகவே, முதலமைச்சர் நேற்று ஆவேசமாக கூறியதுபோல மாநிலங்களவையிலும் மக்களவையிலும் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி பேசுவார்கள் என உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பேசிமுடித்தார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "இந்த அறிவிப்பு தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் வேளாண் மக்களுக்காக நல்ல செய்தி வரும். எதிர்க்கட்சித் தலைவர் கேட்டது போல விரைவில் நல்ல முடிவும் வரும்" என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க: 'விவசாயிகள் சோலார் மின் உற்பத்தி செய்ய அரசு ஊக்குவிக்கும்' - அமைச்சர் தங்கமணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.