கரோனா வைரஸ் நோயால் தமிழ்நாட்டில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களிடம் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, "விழித்திரு.. விலகி இரு... வீட்டில் இரு.... என மக்களை கேட்டுகொள்கிறேன்.
கரோனாவின் தீவிரத்தை உணர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைக்கும். எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம். பொறுப்புள்ளவர்களாக இருந்து நம்மையும் சமுதாயத்தையும் பாதுகாப்போம்.
மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன். கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மூவாயிரத்து 850 ரூபாய் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல. உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு. சாதி, மத, இன வேறுபாட்டை கடந்து கரோனாவை விரட்டியடிப்போம். முதலமைச்சராக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராக கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: மருத்துவர்கள் தங்கள் இல்லத்திற்கு செல்ல வேண்டாம் - மக்கள் நல்வாழ்வுத் துறை