பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை நேற்று (ஜூலை 7) விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் புதிதாக 43 பேர் இடம்பெற்றுள்ளனர்.
குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று (ஜூலை 7) மாலை 6 மணியளவில் நடைபெற்ற விழாவில் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த், 43 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, மக்களவைத்தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் பங்கேற்றனர். புதிய ஒன்றிய அமைச்சரவையில் 15 பேர் ஒன்றிய அமைச்சர்களாகவும், 28 பேர் ஒன்றிய இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றுக்கொண்டனர்.
தமிழருக்கு வாய்ப்பு
இந்த புதிய அமைச்சரவையில் தமிழ்நாட்டைச் சார்ந்த பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் இடம்பெற்றுள்ளர். அவருக்கு தகவல், ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடைத்துறை மற்றும் பால்வளத்துறை ஆகியத்துறைகளின் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
எல்.முருகனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எல்.முருகனுக்கு தொலைபேசி வழியே தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
எல். முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
-
மாண்புமிகு @PMOIndia தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் சகோதரர் திரு.@Murugan_TNBJP அவர்கள் மாண்புமிகு மத்திய அமைச்சராக பதவியேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ள நீங்கள் மக்கள் பணியில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள். pic.twitter.com/W5ryroEGm1
">மாண்புமிகு @PMOIndia தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் சகோதரர் திரு.@Murugan_TNBJP அவர்கள் மாண்புமிகு மத்திய அமைச்சராக பதவியேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 8, 2021
புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ள நீங்கள் மக்கள் பணியில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள். pic.twitter.com/W5ryroEGm1மாண்புமிகு @PMOIndia தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் சகோதரர் திரு.@Murugan_TNBJP அவர்கள் மாண்புமிகு மத்திய அமைச்சராக பதவியேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 8, 2021
புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ள நீங்கள் மக்கள் பணியில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள். pic.twitter.com/W5ryroEGm1
அதேபோல் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ள முருகன் மக்கள் பணியில் சிறந்து விளங்க வாழ்த்துகள்' என தன் ட்விட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மேகதாது அணை - சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் அறிவுரை