ETV Bharat / state

4 மாவட்டங்களில் கனமழை பாதிப்பு: நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

TN CM video conferencing consultation meeting for south districts rain: தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதிக கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் அமைச்சர்கள் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோருடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகள் குறித்து காணொலிக்காட்சி வாயிலாக ஆலோசனைக்கூட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 11:02 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச.18) புதுதில்லியிருந்து காணொலிக் காட்சி வாயிலாகத் தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கா.ப. கார்த்திகேயன், இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி. லட்சுமிபதி, இ.ஆ.ப., கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப., மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன், இ.ஆ.ப., ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்புடன் முகாம்களில் தங்க வைக்கப்பட வேண்டும் என்றும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தங்குதடையின்றி வழங்கப்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், ஆலோசனைக் கூட்டத்தின்போது தமிழ்நாடு முதலமைச்சர் பேசியதாவது, "வரலாறு காணாத இந்த வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக மீட்டு, நிவாரண உதவிகளை மிகக்குறுகிய காலத்திற்குள் வழங்கிட வேண்டிய சவாலான சூழலில் நாம் இப்பொழுது உள்ளோம்.

தற்போது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு இருந்தாலும், இந்த இரண்டு நாட்களில் பெய்த பெருவெள்ளம் இன்னும் வடியாமல், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்னும் வெள்ளநீரில் மக்கள் சிக்கி உள்ளார்கள்.

இவர்களை உடனடியாக மீட்டெடுத்து உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டியது தான் நம் முன் தற்போது இருக்கக்கூடிய தலையாய கடமை. இந்தப் மீட்புப்பணிகளில் ராணுவம், NDRF, SDRF ஆகியவற்றோடு இணைந்து காவல்துறையும், தீயணைப்புத் துறையும், வருவாய்த்துறையும் தொடர்ந்து களப்பணி ஆற்ற வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி முகாம்களில் தங்க வைத்திருந்தாலும், இன்னும் பல பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை உடனடியாக வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்க வேண்டும். இதற்குத் தேவைப்படும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக புதிய முகாம்களை அமைத்திட வேண்டும். தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உணவு, உடைகள், போர்வைகள் போன்ற பொருட்களை உடனடியாக வழங்கிட வேண்டும்.

இந்த நிவாரணப் பொருட்களைப் பக்கத்து மாவட்டங்களில் பெற்றுத் தேவைப்படும் இடங்களுக்குச் சரியான நேரத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டிய பணிகளையும் ஒருங்கிணைத்துச் செயலாற்ற வேண்டும். நாம் அனைவரும் இணைந்து செயலாற்றி மக்களின் உயிர்களைக் காப்பாற்றி, அவர்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிலைநாட்டிட வேண்டியது சவாலான நேரமாக இது அமைந்திருக்கிறது.

சென்னையிலும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது நாம் அனைவரும் செயல்பட்ட அதே வேகத்தோடும், ஒருங்கிணைப்போடும் செயல்பட்டு இந்த பேரிடரையும் நாம் வென்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இந்தப் பணியிலே ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மீட்புப்பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திருநெல்வேலி மாவட்டத்தில் முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களிடம் அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், பாதிப்புகளின் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், அரசு அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தரும் என்றும் நம்பிக்கையூட்டினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலகத்திலிருந்து தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.ப., பொதுத்துறை செயலாளர் க. நந்தகுமார், இ.ஆ.ப., ஆகியோரும் காணொலிக் காட்சி வாயிலாக வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "இனி நாடாளுமன்றம் அமைதியாக நடக்கும்.. அதுவும் பாஜக எம்.பிக்களை பொறுத்து தான்" - டி.ஆர் பாலு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.