ETV Bharat / state

குறுவை சாகுபடி இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ.13,500: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - All district news in tamil

Relief for the damage to Kurvai cultivation: டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

tn-cm-mk-stalin-has-announced-relief-for-the-damage-to-kurvai-cultivation
குறுவை சாகுபடி இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.13,500 அறிவித்த முதல்வர்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 5:55 PM IST

சென்னை: காவிரியில் கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் திறக்கப்படாதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  • காவிரி ஆற்றில், கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் பெறப்படாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் உத்தரவிட்டுள்ளார். pic.twitter.com/VxZHBaxpOk

    — CMOTamilNadu (@CMOTamilnadu) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023 ஜூன் 03ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் தொடர்ந்து திறக்காத காரணத்தால், மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் திறந்து விட இயலாத நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வாடிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.

பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாகக் கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 வீதம் இழப்பீடாக வழங்கிடத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.5) அறிவிப்பை வெளியிட்டுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அக். 12ஆம் தேதி மீண்டும் கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.