தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் செல்கிறார். இந்நிலையில், அவரது வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
சைபர் கிரைம் உதவியின் மூலம், தொலைபேசியில் பேசிய நபரை காவல் துறையினர் கண்டறிந்தனர். அவரின் பெயர் மயில்சாமி என்பதும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. திருப்பூர் காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, முதலமைச்சரின் சேலம் இல்லம் அமைந்துள்ள நெடுஞ்சாலை நகர்ப் பகுதியில் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வழியே வரும் வாகனங்கள், அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.