ETV Bharat / state

பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும்-முதலமைச்சர் அறிவிப்பு - Dairy Development

சென்னை: கரூர், தருமபுரி, தேனி, தூத்துக்குடி, கடலூர் ஆகிய மாவட்டங்களை தலைமையிடங்களாகக் கொண்டு புதிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Edappadi
author img

By

Published : Jul 17, 2019, 4:16 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 110 விதியின் கீழ் கரூர், தருமபுரி, தேனி, துாத்துக்குடி, கடலூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில், 19 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களும், மாநில அளவில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையமும் இயங்கி வருகின்றன. இன்றளவும், சில மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள், இரண்டு முதல் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது.

பால் உற்பத்தியாளர்களுக்கு ஒன்றியங்கள் மூலமாக உரிய நேரத்தில் சேவை வழங்கவும், நுகர்வோர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே தரமான ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள், தங்கு தடையின்றி உடனுக்குடன் கிடைக்கவும் ஏதுவாக, ஒன்றியங்கள் பிரிக்கப்படும். அதன் விளைவாக ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால், நாளொன்றுக்கு 33 லட்சம் லிட்டரிலிருந்து, 35 லட்சம் லிட்டராகவும், விற்பனை 22.5 லட்சம் லிட்டரிலிருந்து, 25 லட்சம் லிட்டராகவும் உயரும்.

புதிய மாவட்டங்களில் உருவாக்கப்படும் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள்:

1. திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து கரூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும்.

2. தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து தருமபுரியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும்.

3. மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து தேனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும்.

4. திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும்.

5. விழுப்புரம்-கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து கடலூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும்.

Intro:nullBody:தமிழ்நாட்டில், 19 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களும், மாநில அளவில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்
இணையமும் இயங்கி வருகின்றன. இன்றளவும், சில மாவட்ட பால்
உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள், இரண்டு முதல் நான்கு மாவட்டங்களை
உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது.

பால் உற்பத்தியாளர்களுக்கு ஒன்றியங்கள் மூலமாக உரிய நேரத்தில்
சேவை வழங்கவும், நுகர்வோர்களுக்கு அவர்களது இல்லங்களுக்கு
அருகிலேயே, தரமான ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள், தங்கு
தடையின்றி உடனுக்குடன் கிடைக்கவும் ஏதுவாக,

1. திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்
ஒன்றியத்திலிருந்து கரூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய
பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும்.

2. தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்
ஒன்றியத்திலிருந்து தருமபுரியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு
புதிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும்.

3. மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து
தேனியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும்.

4. திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும் ;

5. விழுப்புரம்-கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்
ஒன்றியத்திலிருந்து கடலூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய
பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும்.

ஒன்றியங்களை பிரிப்பதன் விளைவாக, ஆவின் மூலமாக கொள்முதல்
செய்யப்படும் பால், நாளொன்றுக்கு 33 லட்சம் லிட்டரிலிருந்து, 35 லட்சம்
லிட்டராகவும், ஆவின் பால் விற்பனை 22.5 லட்சம் லிட்டரிலிருந்து, 25 லட்சம்
லிட்டராகவும் உயரும்.

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.