ETV Bharat / state

உயர்கல்வித்துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர்! - உயர்கல்வித்துறை சார்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள்

உயர்கல்வித்துறை சார்பில் ரூ.102.94கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கல்லூரி கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

CM
CM
author img

By

Published : Oct 28, 2021, 3:32 PM IST

சென்னை: தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்விதுறை சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வக கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இதேபோல் , காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு கலை அறிவியல் கல்லூரி, விழுப்புரம் டாக்டர் எம்ஜிஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, தர்ம்புரி பாலக்கோடு கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி - ஓசூர், சேலம்- வீரபாண்டி, விருதுநகர் மாவட்டம்-சிவகாசி, கோவை- மேட்டுபாளையம், தொண்டமுத்தூர், திருப்பூர் -பல்லடம், சேலம்- எடப்பாடி ஆகிய பல்வேறு இடங்களில் கட்டப்பட்டு உள்ள வகுப்பறை கட்டடங்கள், கழிவறை, ஆய்வகங்கள் உள்ளிட்ட ரூ.102.94 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அப்போது உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வி துறை செயலாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ஜெயலலிதா சிலை உரிய முறையில் பராமரிக்கப்படும்: அமைச்சர் பொன்முடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.