சட்டப்பேரவையில் இன்று வனத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக உறுப்பினர் தா.மோ.அன்பரசன், "திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல பாலங்கள் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை" என்று குற்றம் சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "திமுக ஆட்சியில் பாலப்பணிகள் பற்றி அறிவிப்பு மட்டுமே வெளியானது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்கவில்லை. அதிமுக ஆட்சியில் திட்டத்துக்கான நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கும்போது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விடுகிறார்கள்.
இதன் காரணமாக தான் பாலம் கட்டும் பணி தாமதமாகிறது. தற்போது, அனைத்து பணிகளையும் விரைந்து நிறைவேற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.
தொடர்ந்து காட்டுப் பன்றிகளால் பயிர்கள் சேதம் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதம் குறித்து கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. பயிர் சேதத்தைத் தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இதையும் படிங்க: வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப் பணிகள் - விரைவில் முடிக்க நடவடிக்கை!