டெல்லியில் மதம் சார்ந்த மாநாடு ஒன்று நடந்துள்ளது இதில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர், அவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதை கண்டறிய மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணைத்தலைவர் பொன்னையன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இறைச்சி விற்கப்படும் கடைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. வயதானவர்கள் கூடுமானவரை வெளியே வராமல் இருக்க வேண்டும். குழந்தைகளையும் முடிந்த அளவு வெளியே அனுப்பாதீர்கள்.
ரேஷன் அட்டைத்தார்களுக்கு 1000 ரூபாய் பணம், ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தினை முதல்வர் அறிவித்துள்ளார். கிருமி நாசினியை பொறுத்தவரை குறைபாடு இல்லை, பொது இடங்களில் கைகளை கழுவுவதற்கு சோப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது, அதனை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து வருகிறது.
மருத்துவ வசதியை பொறுத்தவரை மக்களுக்கு தேவையான மருந்துகள் கிடைக்கின்றன. குறிப்பாக கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது. அதில் பல மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அது கரோனாவிற்கான மருந்து இல்லை. அதற்கான மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. மாறாக நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்தும் என்பதால் இது பரிந்துரைக்கப்படுகிறது என்றார்.
இதையும் படிங்க: மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஆகிறார் பொன்னையன்