பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி, காப்பீட்டு மூலம் பொதுமக்களுக்கு தனது சேவையினை வழங்கி வருகிறது. எல்ஐசியில் பல லட்சம் பேர் முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், எல்ஐசியின் ஒரு பகுதி பங்குகளை விற்று நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேற்றைய பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
இந்த அறிவிப்பால், தங்களின் பணி பாதுகாப்பு என்பது கேள்விகுறியாகிவிடும், உடனே இதனை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து எல்ஐசி ஊழியர்கள் அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: அலுவலகப் பணிகளைப் புறக்கணித்து எல்ஐசி ஊழியர்கள் ஆர்பாட்டம்