சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் ரவுடி கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி (39). இவர் திருவெற்றியூர் உள்ள எர்ணாவூரில் தன் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை 10:30 மணி அளவில் அந்த பகுதிக்கு வந்த 6 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக வெட்டி கொலை விட்டு தப்பி சென்றனர்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அரும்பாக்கம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுதொடர்பாக அண்ணாநகர் உதவி ஆணையர் குணசேகர் தலைமையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அரும்பாக்கத்தை சேர்ந்த சங்கர், அஜித், கோயம்பேடுவை சேர்ந்த பாபு, மற்றும் கவிராஜ் என்பதும், 2011ல் நடந்த கொலைக்கு பழி தீர்த்ததாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.