ETV Bharat / state

ஊடக விவாதங்களில் கலந்துகொள்வோர் பட்டியல் - tn bjp NEWS

சென்னை: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அக்கட்சியின் சார்பில் ஊடக விவாதங்களில் கலந்து கொள்வோரின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

tn bjp spokes person list
author img

By

Published : Aug 27, 2019, 4:45 AM IST

Updated : Aug 27, 2019, 11:32 AM IST

ஊடக விவாதங்களில் கலந்து கொள்ளும் பாஜகவினருக்கு சம வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, கடந்த ஜூலை மாதம் முதல் தமிழ்நாடு பாஜகவினர் எவ்வித ஊடக விவாதங்களிலும் கலந்துகொள்ளாமல் இருந்தனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் ஊடக விவாதங்களில் கலந்து கொள்வார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பில், பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.எஸ். நரேந்திரன் விவாதங்களில் கலந்து கொள்வோருக்கான ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

tn bjp spokes person list
ஊடக விவாதங்களில் பங்கேற்போரின் பட்டியல்

அதன்படி, வானதி சீனிவாசன், நைனார் நாகேந்திரன், கே.டி. ராகவன், ஸ்ரீனிவாசன், எஸ்.ஆர். சேகர் உட்பட 27 பேர் கே.எஸ். நரேந்திரனால் ஒருங்கிணைக்கப்பட்டு விவாதங்களில் கலந்து கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் கருத்துகள் மட்டுமே கட்சியின் கருத்துக்களாக ஏற்றுக்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

TN BJP Spokesperson list

Conclusion:
Last Updated : Aug 27, 2019, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.