இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மறைவு மிகப்பெரிய பேரிழப்பாகும். உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து பல்வேறு சிறப்பான தீர்ப்புகளை வழங்கினார். தவிர, மத்திய சட்ட ஆணையத்தின் தலைவராக திகழ்ந்தவர். அனைவரோடும் அன்பாக பழகக் கூடிய அன்புள்ளம் கொண்டவர்.
இரண்டு நாள்களுக்கு முன்பாக இவரது துணைவியார் மீனாட்சி மறைந்த சூழலில் இன்று (ஆகஸ்ட் 27) இவரும் மறைந்தது மிகப் பெரிய வேதனையாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது சார்பிலும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: முன்னாள் நீதிபதி மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்