தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தராஜன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ’ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கிறார் என்று நீதிபதியிடம் வழக்கறிஞர் கபில் சிபில் தெரிவிக்கிறார். ஆனால் சிபிஐ வாதமே அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதுதான். நேற்று, சிதம்பரம் சட்டத்தை எதிர்கொண்ட முறை மிகவும் தவறானது.
டெல்லியில் திமுக கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டம் இந்திய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த ஆர்ப்பாட்டத்தை பாகிஸ்தானில் வைத்திருக்கலாம். இதனால் திமுகவிற்கு எந்த ஒரு பெருமையும் சேராது. சிதம்பரமும், காங்கிரசும் வலுவிழந்து பலமே இல்லாத கட்சியாக இருக்கிறது. பாஜக எதிரியே இல்லாத மிகப்பெரிய கட்சியாக மாறியுள்ளது. இவர்களை பழிக்கு பழிவாங்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை’ என்றார்.