கோவிட்-19 வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பள்ளிகள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் கடந்த வாரம் முதல் வைரஸ் விழிப்புணர்வு மற்றும் மருந்து தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் பேரவைக்கு வரும் உறுப்பினர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே, சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்வையிட வரும் பள்ளி மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை பார்வையாளர்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்ப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொருளாளர் பதவியைத் துறந்த துரைமுருகன்: 'அடுத்தது பொ.செ.தான்' - அடித்துக்கூறும் உ.பி.க்கள்!