இன்று மூன்றாவது நாளாக நடைபெற்றுவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்:
- நல்லாட்சி குறியீட்டில் முதலிடம் என சொல்லும் தமிழ்நாடு அரசு, குற்றங்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொள்ளாமலேயே சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்குகிறது என எப்படி சொல்லலாம்.
- 250க்கும் மேற்பட்ட பெண்கள் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கில் தமிழ்நாடு முதலிடம் என்பதை எப்படி எடுத்துக் கொள்ள முடியும்.
- தென்பெண்ணையாறு மற்றும் மேகதாதுவில் அணைகட்டும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?
- குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகிறது.
- குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அதிமுக வாக்களித்ததால் தான் இது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
- குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஆளுநர் உரையில் குறிப்பிடாதது ஏன்? என பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ஆளுநர் அறிக்கை என்பது அரசின் கொள்கை, கோட்பாட்டை விளக்கும் வகையில் தான் இருக்க வேண்டும். ஆனால் அரசின் செய்திக் குறிப்பு போல் உள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், ரயில்வே கைடு போல் இருக்கும் ஆளுநர் உரை, 'Statement of Fear' என்ற பய அறிக்கையாக மட்டுமே பார்க்கப்படும் என விமர்சித்து பேசினார்.
இதையும் படிங்க: யாருக்கு வளர்பிறை, யாருக்கு தேய்பிறை என்பது 2021இல் தெரிந்துவிடும் - ஸ்டாலின் சூளுரை