ETV Bharat / state

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு திரும்புவோருக்கு இணையதளம் - அரசு அறிவிப்பு - வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தொடர்புகொள்ள இணையதளம்

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்குத் திரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Tn announcement  தமிழ்நாடு அரசு அறிவிப்புகள்  தாயகம் திரும்புவோர்களுக்கான இணையதளம்  வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தொடர்புகொள்ள இணையதளம்  tn announcement for tamils who are stuked in foreign due to the corona lock down
வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பும் தமிழர்கள் தொடர்பு கொள்ள இணையதளம் அறிமுகம்
author img

By

Published : Apr 30, 2020, 7:46 PM IST

Updated : Apr 30, 2020, 11:51 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியா முழுவதும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது.

இதனால், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நம் நாட்டிற்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tn announcement  தமிழ்நாடு அரசு அறிவிப்புகள்  தாயகம் திரும்புவோர்களுக்கான இணையதளம்  வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தொடர்புகொள்ள இணையதளம்  tn announcement for tamils who are stuked in foreign due to the corona lock down
அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

அவ்வாறு வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களில், உடனடியாக தமிழ்நாட்டிற்குத் திரும்ப விரும்புகிறவர்களின் நலனுக்காகவும், அவர்களின் குடும்பத்தினரின் நலனைக் காத்திடும் நோக்கிலும், அவர்களது எண்ணிக்கையினை அறியும் வகையிலும், தமிழ்நாட்டிற்குத் திரும்புகிறவர்களுக்கு தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்திடவும், அவர்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காகவும் இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்குத் திரும்ப விரும்பும் தமிழர்கள் என்ற இணைய முகப்பில் பதிவுகள் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: தென் மாவட்டங்களில் ஊரடங்கைத் தளர்த்த வாய்ப்புள்ளதா?

Last Updated : Apr 30, 2020, 11:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.