சென்னை: தளர்வுகளற்ற ஊரடங்கால் மருத்துவமனையில் தங்கியிருக்கும் கரோனா தொற்று நோயாளிகளின் உறவினர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உணவு வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் கரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. தற்போது தளர்வுகளற்ற ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், தொற்று பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் வாகன வசதி இல்லாமல் மருத்துவமனைகளுக்கு வெளியே தங்கியுள்ளனர். மேலும் உணவில்லாமலும் அவர்கள் துன்பப்பட்டு வருகின்றனர்.
இதனைத் தடுக்கும் வகையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர்ந்து 15 நாள்களாக அவர்களுக்கு உணவு அளித்து வருகின்றனர். இதற்காக வண்ணாரப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அலுவலகத்தில், வடசென்னை மாவட்ட தலைவர் அலி தலைமையில் அவ்வமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் ஒன்றாக சேர்ந்து உணவு தயாரித்து, சுத்தமான முறையில் பேக்கிங் செய்து, நேரடியாக மருத்துவமனைகளுக்குச் சென்று கொடுத்து வருகின்றனர்
சென்னை எழும்பூர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்பட பல அரசு மருத்துமனைகளில் வெளியே உள்ளவர்களுக்கு உணவளித்து வருகின்றனர். மனிதநேயத்துடன் தமுமுகவினர் செய்துவரும் இச்செயல் பலரின் பாரட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சென்னையின் மூன்று பள்ளிகளுக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் சம்மன்