கரோனா பரவலின் இரண்டாம் அலை தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைப்பது குறித்து அரசு பரிசீலனை நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடைகள் தற்போது மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் நிலையில், கடந்த ஆண்டைப் போலவே காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நேரத்தை மாற்ற ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், டாஸ்மாக் கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் எந்தவித கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றாமல் இருப்பதால் கரோனா பரவுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இக்கட்டான இந்த கரோனா சூழலில், டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூடினால் அரசின் வருவாய் பாதிக்கும், அதே சமயம் நேரத்தைக் குறைத்தால் கூட்டம் அதிகரித்து கரோனா வேகமாகப் பரவும் அபயாம் ஏற்படும் என்பதால், நேர மாற்றத்தை மட்டும் தற்போது அரசு பரிசீலித்து வருகிறது.