துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு துக்ளக் 50ஆவது ஆண்டு விழா மலரை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், மூத்த பத்திரிகையாளர்கள், பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், "கவலைகள் அன்றாடம் வரும், அதை நிரந்தரமாக்கிக் கொண்டால் நீ நோயாளி, தற்காலிகமாக்கிக் கொண்டால் நீ அறிவாளி. கவலை அனைத்தையும் தற்காலிகமாக்கிக் கொண்டவர் சோ ராமசாமி. முரசொலி வைத்திருந்தால் அவர்களைத் திமுககாரர் என்று சொல்லிவிடலாம். துக்ளக் வைத்திருந்தால் அவர்களை அறிவாளி என்று சொல்லிவிடலாம்.
காணும் பொங்கலை முன்னிட்டு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!
தற்போது சோ போன்ற பத்திரிகையாளரின் தேவை மிக அவசியம். காலம், சமுதாயம் ரொம்ப கெட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. நடுநிலை ஊடகங்கள், பத்திரிகைகள் உண்மையை எழுத வேண்டும். மிகப்பெரிய பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது. சோ என்றால் துக்ளக். துக்ளக் என்றால் சோ. துக்ளக் பத்திரிகையை குருமூர்த்தி ஒரிஜினாலிட்டியுடன் நடத்திவருகிறார். சோ ஒரு ஜீனியஸ். ஜீனியஸ் என்பது படித்து வருவதல்ல, பிறந்து வருவது.
அவரை பெரிய ஆளாக்கியவர்கள் அவரை எதிர்த்து விவாதம் செய்த கருணாநிதி, பக்தவச்சலம். 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சீதா தேவி படத்திற்கு உடையில்லாமல் காலணி மாலை அணிவித்து ஊர்வலமாகச் சென்றனர். அதனை எந்தப் பத்திரிகையும் விமர்சிக்கவில்லை.
ஆனால், சோ அதனை அட்டைப் படத்தில் போட்டு கடுமையாக விமர்சித்தார். அப்போது ஆளும் கட்சியாக இருந்த திமுக அரசு துக்ளக் பத்திரிகை யாருக்கும் கிடைக்கவிடாமல் தடைசெய்தனர்.
ஆனால், மறுபடியும் அதனை அச்சடித்து வெளியிட்டார். அந்தப் பத்திரிகை பிளாக்கில் வெளியானது. சோவை இந்தியா வரை பிரபலப்படுத்தியது இந்திரா காந்தி. அவசரநிலை காலத்தில் கறுப்பு அட்டைப் படத்தை வெளியிட்டது அவரை பிரபலப்படுத்தியது" என்று கூறினார்.