சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் லட்சுமி நகரில் வசித்து வரும் விஜயகாந்த்-ஜெபசெல்வி தம்பதியரின் 3 வயது ஆண் குழந்தை வீட்டின் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளது. குழந்தையை காணவில்லை எனத் தேடிய ஜெபசெல்வி குழந்தை கழிவுநீர் தொட்டியில் விழுந்துள்ளதை கண்டு அதிர்ச்சியை அடைந்தார். அதையடுத்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பீர்க்கன்காரணை காவல் துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கார், இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு!