சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு அருகே கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அப்பகுதியில் சென்று தனிப்படை காவல்துறையினர் சோதனையிட்டப்போது ஒரு வீட்டில் இருந்து 47 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஜலாலுதீன், தினேஷ், காளி ஆகிய 3 பேரின் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.
விசாரனையில், ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக பின்னர் அதை சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து சென்னை, புறநகர் பகுதிகளில் சில்லறை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: சின்னசேலம் காவல் நிலையங்களில் எஸ்பி ஜியாவுல் ஹக் நேரில் ஆய்வு!