ETV Bharat / state

எஸ்ஐ தொல்லை கொடுக்கிறார்... தற்கொலைக்கு முயன்ற மூவரிடம் போலீஸ் விசாரணை - .. தற்கொலைக்கு முயன்ற மூவரிடம் போலீஸ் விசாரணை

எழும்பூர் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு போடுவதாக கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு மூவர் பிளேடால் அறுத்து, தற்கொலைக்கு முயன்றவர்களை மீட்ட காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி
author img

By

Published : Apr 1, 2022, 11:28 AM IST

சென்னை: வேப்பேரியில் அமைந்துள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் நுழைவாயில் முன்பு நேற்றிரவு (மார்ச் 31) 11.15 மணியளவில் குடிபோதையில் மூன்று பேர் வந்தனர். அவர்கள், திடீரென தங்கள் கையில் இருந்த பிளேடால் உடல் முழுவதும் அறுத்துக் கொண்டு, உடம்பில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.

இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடனே அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி வேப்பேரி காவல் ஆய்வாளர் கண்ணனுக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வேப்பேரி காவல் துறையினர், தற்கொலைக்கு முயன்றவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் எழும்பூர் காவல் நிலையம் அருகில் பிளாட்பாரத்தில் வசித்து வரும் ஆல்பர்ட் (30), தினேஷ்குமார் (22), சஞ்சய் (19) எனத் தெரியவந்தது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் எழும்பூர் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் என்பவர் தங்கள் மீது தேவையில்லாமல் வழக்குப்பதிவு செய்வேன் எனக்கூறி மிரட்டி வருவதாக தெரிவித்தனர்.

தற்கொலை முயற்சி

பின்னர் பிளேடால் அறுத்துக்கொண்ட மூன்று பேரையும் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொர்ந்து இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த பேராசிரியர்: மாணவர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.