ETV Bharat / state

செருப்புகளை திருடி சந்தையில் விற்ற வடமாநிலத்தவர்கள் கைது

தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிகளில் காலணிகளை திருடி சந்தையில் விற்பனை செய்துவந்த வடமாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

செருப்புகளை திருடி சந்தையில் விற்ற வடமாநிலத்தவர்கள் கைது
செருப்புகளை திருடி சந்தையில் விற்ற வடமாநிலத்தவர்கள் கைது
author img

By

Published : Jan 24, 2023, 7:05 AM IST

செருப்புகளை திருடி சந்தையில் விற்ற வடமாநிலத்தவர்கள் கைது

சென்னை: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் அடிக்கடி காலணிகள் திருடப்பட்டு வந்துள்ளன. அந்த வகையில் அண்மையில் ஒருவரது வீட்டில் காலணிகள் திருடு போயின. அதனால் வீட்டின் உரிமையாளர் குடியிருப்பு பகுதிகளில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தப்போது, ஒருவர் படிக்கட்டுகளில் தவிழ்ந்து வந்து காலணிகளை திருடி சென்றிருப்பது பதிவாகியிருந்தது.

இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபரை தேடி வந்தனர். இந்த புகாரில் கேம்ப்ரோடு பகுதியில் உள்ள கேக் கடையில் வேலை பார்த்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த விகாஸ் குமார், ரோஹித் குமார் ஆகியோரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது.

அதில் காலணிகளை திருடியது விகாஸ் குமார், ரோஹித் குமார் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அருள் எப்ரின் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். முதல்கட்ட தகவலில், மூன்று பேரும் குடியிருப்பு பகுதிகளில் காலணிகளை திருடி பல்லாவரம் வார சந்தையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து 300 ஜோடி காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: 'ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ்' நூதன முறையில் இளம்பெண் ஏமாற்றம்.. பஞ்சாப் இளைஞர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.