சென்னை புறநகர் பகுதிகளான நசரத்போட்டை,செம்பரம்பாக்கம், பூவிருந்தவல்லி, மேப்பூர் போன்ற பகுதிகளில் வாட்ஸ் ஆப் குழு மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் விஜயராகவன் தலைமையில் நசரத்பேட்டை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸ் ஆப் குழு மூலம் கஞ்சா விற்பனை நடைபெற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து நசரத்பேட்டையைச் சேர்ந்த ஜஸ்டின் பிரபாகரன்(21), ஹேமகுமர்(21), சரண்ராஜ்(23), ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்து, பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இவர்களிடம் இருந்த 1 கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் கஞ்சா விற்ற பெண் உள்பட இருவர் கைது!