சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பார்வதி தாக்கல் செய்த மனுவில், கடந்த 2015ஆம் ஆண்டு தன்னை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பூட்ஸ் கால்களால் தாக்கி, பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்த கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் கனகராஜ், உதவி ஆய்வாளர்கள் ஆறுமுகம், சதீஷ்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், ஆய்வாளர் கனகராஜ், உதவி ஆய்வாளர்கள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது சாட்சியம் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மூன்று பேருக்கும் சேர்த்து 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த தொகையை ஒரு மாதத்திற்குள் மனுதாரருக்கு வழங்கி விட்டு, அதை குற்றம் சாட்டப்பட்ட மூவரிடமும் வசூலித்துக் கொள்ள தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட உறுப்பினர் ஜெயச்சந்திரன், காவல்துறையினர் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரைத்தார்.
இதையும் படிக்க: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி பரிந்துரை