ETV Bharat / state

மோசமான வானிலை: சென்னையில் தரையிறங்கிய பெங்களூரு விமானங்கள்

author img

By

Published : Nov 4, 2020, 12:06 PM IST

சென்னை: பெங்களூரில் மோசமான வானிலை காரணமாக அங்கு தரையிறங்க வேண்டிய 3 விமானங்கள் சென்னையில் தரையிறங்கியுள்ளன.

flights
flights

சென்னை விமானநிலையத்தில் இன்று (நவம்பர் 4) காலையில் பெங்களூரில் தரையிறங்க வேண்டிய லண்டனிலிருந்து 166 பயணிகளுடன் பெங்களூரு சென்ற பிரிட்டிஷ் ஏா்லைன்ஸ், டெல்லியிலிருந்து 81 பயணிகளுடன் பெங்களூரு சென்ற தனியார் விமானம், சென்னையிலிருந்து 137 பயணிகளுடன் பெங்களூரு சென்ற விமானம் என 3 விமானங்கள் அங்கு வானிலை மோசமான காரணத்தால் சென்னையில் தரையிறங்கியது.

பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமரவைக்கப்பட்டுள்ளனா். அவர்களுக்கு உணவு ஏற்பாடுகளை அந்தந்த விமான நிறுவனங்கள் செய்து கொடுக்கின்றன. வானிலை சீரடைந்தபின்பு விமானங்கள் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.