ETV Bharat / state

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்.. மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு!

Mylapore Kapaleeshwarar Temple: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் மீன்கள் திடீரென உயிரிழந்ததைத் தொடர்ந்து, மீன்கள் இறப்புக்கான காரணம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் மீன்கள் இறப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 1:59 PM IST

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் என்பது சென்னை அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று(நவ.27) இக்கோயில் தெப்பக்குளத்தில் உள்ள ஆயிரக் கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகம் இது குறித்த தகவலை மீன்வளத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இந்து சமய அறநிலையத் துறைகளுக்கு தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி பணியாளர்கள் இறந்த மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கோயில் குளத்தில் உள்ள மீன்களை அகற்றிய நிலையில், குளத்தில் உள்ள நீரில் ஏதாவது நச்சுத்தன்மை உள்ளதா, மீன்கள் நோய் வாய்ப்பட்டுள்ளதா, குளத்தில் இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா? அல்லது கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு பக்தர்கள் அளித்த உணவால் மீன்கள் இறந்தனவா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில், மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் மீன்கள் இறப்பு
கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் மீன்கள் இறப்பு

கபாலீஸ்வரர் கோயில் குளத்தின், மீன்கள் இறப்பு குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "இன்று காலை 7 மணியளவில், கோயில் நிர்வாகம் சார்பில், தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்திற்கு மீன்கள் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டன. இதனால் 25 பணியாளர்களுக்கு மேல் மயிலாப்பூர் குளத்தில் இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் மீன்கள் இறப்பு

மேலும், இறந்த மீன்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் துர்நாற்றம் வீசும் என்பதால் உடனடியாக அப்பகுதியில் குளோரின் மற்றும் பீளிச்சீங் பவுடர் தெளிக்கப்பட்டன. இந்த நேரத்தில் பக்தர்கள் யாரும் குளத்தில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளது. முதற்கட்ட நடவடிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள்” என தெரிவித்தார்.

இரண்டு மாதத்தில் தை மாத தெப்ப உற்சவம் நடைபெறவுள்ள நிலையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் தெப்பக் குளத்தில் மீன்கள் இறந்துள்ள சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இளைஞரை சக நண்பர்கள் தாக்கி முகத்தில் சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாக புகார்.. உ.பியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.