சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 13ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி பேசுகையில், ’அறிவியல், தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், பல புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தொலை தூரக்கல்வியில் இன்டர்நெட் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. டிஜிட்டல் முறையில் ஒரே நேரத்தில் பலநூறு மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பிக்க முடிகிறது. தொழில்நுட்ப நுணுக்கங்களை டிஜிட்டல் வழியில் கற்பிப்பது மிகவும் எளிது. டிஜிட்டல் மூலம் தேவையான பாடங்களை தேடித்தேடி கற்றுக்கொள்ள முடியும். மேலும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகமும் பல டிஜிட்டல் முன்னெடுப்புகளை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்