ETV Bharat / state

வெள்ளை அடிக்க வந்தவர்கள் வங்கியில் கொள்ளை; 3 பேரிடம் விசாரணை - villivakkam

சென்னை வங்கியில் சுண்ணாம்பு அடிக்க வந்தவர்கள் லாக்கரில் இருந்து 20 ஆயிரம் ரூபாயை கொள்ளை அடித்துச்சென்றது தொடர்பாக சிசிடிவி காட்சியின் அடிப்படையில் 3 பேரைப் பிடித்து வில்லிவாக்கம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளை அடிக்க வந்தவர்கள் வங்கியில் கொள்ளை; 3 பேரிடம் விசாரணை

author img

By

Published : Aug 2, 2022, 6:14 PM IST

சென்னை வில்லிவாக்கத்தில் நியூ ஆவடி சாலையில் போக்குவரத்து அதிகம் உள்ள பிரதான சாலையில் செயல்பட்டு வருகிறது, லட்சுமி விலாஸ் வங்கி. சிங்கப்பூரை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வரும் டிபிஎஸ் வங்கியுடன் சமீபத்தில் இணைக்கப்பட்ட இந்த வங்கியின் லாக்கர்கள், பெட்டகங்கள் கட்டடத்தின் தரை தளத்திற்குக்கீழே உள்ள தளத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தரைதளத்தில் உள்ள ஒரு சிமென்ட் ஜன்னல் மட்டும் உடைக்கப்பட்டு வெளிச்சமாக இருப்பதைக்கண்ட வங்கி ஊழியர்கள் வில்லிவாக்கம் போலீசாருக்குத்தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வில்லிவாக்கம் காவல் துணை ஆணையர், உதவி ஆணையர், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் ஒரு லாக்கரில் இருந்து இருபதாயிரம் ரூபாயை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது.

மேலும் வங்கியில் ஒரு வாரமாக சுண்ணாம்பு அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர்கள் இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது சிசிடிவி கேமரா காட்சியின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது. மேலும் கொள்ளைபோன பொருட்கள் குறித்து விவரம் சேகரிக்கப்பட்டதில் அருகிலிருந்த பெரிய லாக்கரில் வைக்கப்பட்ட 7 கோடி ரூபாய் பணம் மட்டும் பத்திரமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வங்கியில் கடந்த ஒரு வாரமாக சுவர் பராமரிப்புப்பணிகளில் பெயிண்ட் அடித்து வந்த 3 பேரைப் பிடித்து வைத்து வில்லிவாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கக்கட்டி பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.