திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தங்களுக்கான தொகுதிகள் அனைத்திலும் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், நான்கு தனித் தொகுதிகள், இரண்டு பொதுத் தொகுதிகள் என ஆறு தொகுதிகளுக்குமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உத்தேசப் பட்டியல் என ஒரு தகவல் வெளியாகியது.
இந்நிலையில் இந்தத் தகவல் குறித்து ட்வீட் செய்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உத்தேச வேட்பாளர் பட்டியல் எனப் பரவிவரும் தகவலில் உண்மையில்லை. இயக்கத் தோழர்கள் இதனைப் பொருட்படுத்த வேண்டாம். தொகுதிகள் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை.
வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்த பின்னர் தேர்வுக்குழு வேட்பாளர்களைப் பரிந்துரைக்கும், அதன்பிறகே அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.