ETV Bharat / state

தேமுதிக, பாமகவால் எங்களுக்கு பாதிப்பில்லை: திருநாவுக்கரசர் பேச்சு

சென்னை: தேமுதிக மற்றும் பாமக கூட்டணியில் சேர்ந்துள்ளதால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

Thirunavukkarasar
author img

By

Published : Mar 14, 2019, 7:14 PM IST

திராவிட முன்னேற்றக்கழகம்- காங்கிரஸ் கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளுக்கும் ஒவ்வொரு கட்சிகளுக்கான எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் அழகிரி தலைமையிலான குழு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

இன்று மாலை யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்கிற பட்டியல் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்ற அறிவிப்பு வெளியாகும். அதன் பிறகு அந்தந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

காங்கிரஸ் தேர்தல் கமிட்டி சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும். மீண்டும் டெல்லியில் ஒரு குழு, வேட்பாளர்களை பரிசீலித்து அதன் பிறகு யார் வேட்பாளர் என்பதை ராகுல் காந்தியின் அனுமதிபெற்று அறிவிக்கும் எனத் தெரிவித்தார். தேமுதிக மற்றும் பாமக கூட்டணியில் சேர்ந்ததால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

எங்கள் கூட்டணியில் ஏராளமான கட்சிகள் உள்ளன. இது இரவோடு இரவாக பேசி முடித்த கூட்டணி இல்லை. இரண்டு மூன்று ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக போராடி வருகின்ற கூட்டணி.போதுமான பலத்தோடு எங்கள் கூட்டணி உள்ளது. இதற்கு மேல சேர்ப்பதற்கும், கொடுப்பதற்கும் இடம்தான் இல்லை. எங்கள் கூட்டணியில்

பாஜக கூட்டணி என்பது மூழ்கும் கப்பல் போன்றது.மத்தியிலும், மாநிலத்தில் உள்ள ஆட்சியின் மீதும் மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது. இரண்டு ஆட்சியையும் அகற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். எங்கள் கூட்டணி கொள்கை ரீதியான வெற்றி பெறும் கூட்டணி. 39 தொகுதிகளில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.

பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் காலம் தாழ்த்தினாலும், குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முயற்சி செய்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்று தர காங்கிரஸ் போராடும் எனத் தெரிவித்தார்

Intro:சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

Body:சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

திராவிட முன்னேற்றக்கழகம் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளுக்கும் ஒவ்வொரு கட்சிகளுக்கான எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது

திமுக தலைவர் ஸ்டாலினுடன் பேசி எந்தெந்த தொகுதி யாருக்கு என்ற இறுதி வடிவம் நடந்திருக்கிறது

காங்கிரஸ் கட்சி சார்பில் அழகிரி தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளது தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது வேட்புமனு தாக்கல் வருகிற 19ம் தேதி தொடங்குகிறது

இன்று மாலை யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்கிற பட்டியல் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது

நாளை அல்லது நாளை மறுநாள் காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டிருக்கிறது என்று அறிவிக்கப்படும் அதன் பிறகு அந்தந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

காங்கிரஸ் தேர்தல் கமிட்டி சார்பில் வேட்பாளர்களை பரிசளித்து பட்டியலிட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும் மீண்டும் டெல்லியில் ஒரு குழு வேட்பாளர்களை பரிசீலித்து அதன் பிறகு யார் வேட்பாளர் என்பதை ராகுல் காந்தி அனுமதிபெற்று அறிவிக்கப்படும் என தெரிவித்தார்

தேமுதிக மற்றும் பாமக அவர்கள் கூட்டணியில் சேர்ந்ததால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை

எங்கள் கூட்டணியில் ஏராளமான கட்சிகள் உள்ளன இது இரவோடு இரவாக பேசி முடித்த கூட்டணி இல்லை இரண்டு மூன்று ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக போராடி வருகின்ற கூட்டணி

விவசாயிகளின் பிரச்சினை மற்றும் மக்களின் பிரச்சினை பொதுக்கூட்டங்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இதுபோன்ற திமுக காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள எல்லாக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து தொடர்ந்து செயல்பட்டு வருகின்றோம் யாரும் இரவோடு இரவாக வந்து சேரவில்லை போதுமான பலத்தோடு எங்கள் கூட்டணி உள்ளது என தெரிவித்தார்

இதற்கு மேல சேர்ப்பதற்கும் கொடுப்பதற்கும் இடம்தான் இல்லை எங்கள் கூட்டணியில்

பிஜேபி கூட்டணி என்பது மூழ்கும் கப்பல் போன்றது

இந்த மத்தியில் மற்றும் மாநிலத்தில் உள்ள ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது இரண்டு ஆட்சியும் அகற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்

அவர்களின் கூட்டணியில் யார் சேர்ந்தாலும் அவர்களின் பலவீனம் அவர்களையும் சேர்த்து பாதிக்கப்படும்

எங்கள் கூட்டணி கொள்கை ரீதியான வெற்றி வெற்றி பெறும் கூட்டணி 39 தொகுதிகளில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்

பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் ஆளுங்கட்சியாக இருந்த சரி ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களாக இருந்தாலும் சரி தண்டிக்கப்பட வேண்டும் அதில் காலம் தாழ்த்தினாலும் தப்பிக்க வைக்க முயற்சி செய்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்று தர காங்கிரஸ் போராடும் என தெரிவித்தார்

Conclusion:இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.