விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. அதில், இந்து மத பெண்கள் விபச்சாரிகள் எனவும், இதை இந்து சாஸ்திரங்களான மனு தர்மம் என்ற புத்தகத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பேசியிருந்தார்.
திருமாவளவனின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அவர் மீது கலகம் செய்தல், உணர்வுகளைத் தூண்டிவிட்டு கலவரம் செய்ய முயற்சித்தல், மதத்தினரிடையே கலவரத்தை உருவாக்குதல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்குக் கண்டனம் தெரிவித்து பல அரசியல் கட்சியினர் குரல் கொடுத்துவருகின்றனர். அந்த வகையில் தற்போது திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் இதற்கு கண்டனம் தெரிவித்து செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "மனுநூல் கருத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் மீது காவல் துறையினர் மூலம் வழக்குப்பதிவு செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் விதத்திலும் ஜனநாயக விரோதமாகவும் ஒரு கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மீது அவரது பேச்சுக்காக உள்நோக்கத்தோடு களங்கம் கற்பித்து வழக்குப்பதிவு செய்திருப்பது முற்றிலும் ஜனநாயக விரோதமாகும். பேச்சு சுதந்திரத்தை நசுக்குவது ஆகும்.
திருமாவளவன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என முதலமைச்சரையும் காவல் துறையினரையும் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
'திருமாவளவன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பது ஜனநாயக விரோதம்!'
சென்னை: தொல். திருமாவளவன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பது பேச்சு சுதந்திரத்தை நசுக்குவதாகும் என திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.