இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
அரசியல் களத்தில் வெற்றி தோல்வி இயல்பான ஒன்றுதான். காங்கிரஸ் கட்சி மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறது. அதனை காங்கிரஸ் தலைவர் மிகத் தெளிவாக கூறிவிட்டார். ராகுல்காந்தியின் ராஜினாமா கடிதத்தை காரிய கமிட்டி ஏற்கனவே நிராகரித்துள்ளது. அவரை தலைவராக தொடர வேண்டும் என்ற வலியுறுத்தல் காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் நிலவி வருகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ராகுல் தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்று நாங்கள் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைக்க உள்ளோம். டெல்டா பகுதியான திருச்சியில் பல்வேறு திட்டங்கள் தொய்வில் உள்ளது. அதை வேகப்படுத்த முயல்வேன். நான் மட்டுமல்லாது எங்கள் கூட்டணியில் வெற்றி பெற்ற அனைவரும் குரல் கொடுப்போம்.
ரஜினி மோடியை தனித்துவமான தலைவர் என்று கூறியது அவரின் சொந்தக் கருத்து. மோடியை பெருமையாய் கூறியுள்ளாரே தவிர அவர் ஆட்சியை அல்ல. பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் 5 ஆண்டுக்கு வாக்களித்துள்ளனர். இந்தியாவை எழுதித் தரவில்லை. எனவே ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும். ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பார்” என்று தெரிவித்தார்.