சென்னை விமான நிலையத்திற்கு வருகைபுரிந்திருந்த விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், ரஜினி, கமல் இணைவது குறித்து கருத்து ஏதும் சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சமயத்தில் தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் இயற்றியது அதிர்ச்சி அளிக்கிறது. மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்ந்தெடுக்கும் வகையில் அவசரச் சட்டம் இயற்றியது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
இச்செயல் ஆளும் கட்சி தடுமாற்றத்திலும், அச்சத்திலும் இருப்பதை வெளிப்படுத்துகிறது. இந்த நடவடிக்கையானது அதிகார துஷ்பிரயோகத்திற்கும், ஆள்கடத்தல், குதிரை பேரம் நடத்துவதற்கு வழிவகுக்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி அமைதியாக நடைபெறுவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை எனவும் அவசர சட்டம் இயற்றியதில் ஏதோ அரசியல் உள்நோக்கம் இருக்கிறது எனவும் திருமாவளவன் கூறினார்.
இதையும் படிங்க:
திருமாவளவன் குறித்து அவதூறு பதிவு - தாக்குதல் நடத்திய விசிகவினர்