ETV Bharat / state

தமிழ்நாட்டு இட ஒதுக்கீடு முறையை பின்பற்றுக- திருமாவளவன்

தமிழ்நாட்டு இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி சமூக நீதியை காக்க வேண்டும் என தமிழக உயர்கல்வித் துறை செயலாளருக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.

Thirumavalavan letter  to Secretary of Higher Education, Ms. Apurva IAS Reg  Student admissions in the Dept of Biotechnology

author img

By

Published : Feb 2, 2021, 3:37 PM IST

சென்னை: மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாததால் எம்.டெக் பயோடெக்னாலஜி மற்றும் கம்பியூடேஷனல் பயோடெக்னாலஜி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்த முடியவில்லை எனக் கூறி இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்துள்ளது அண்ணா பல்கலைகழகம்.

Thirumavalavan letter  to Secretary of Higher Education, Ms. Apurva IAS Reg  Student admissions in the Dept of Biotechnology
திருமாவளவன் கடிதம்

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், தமிழக உயர்கல்வித் துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், அண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத்துறையின் பட்டமேற்படிப்புக்கு தமிழ்நாடு அரசின் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு கொள்கையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த மறுத்துள்ளார் துணைவேந்தர் சூரப்பா. தற்போது அட்மிஷனே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

  • Student admissions in the Dept of #Biotechnology, Anna University have been stopped under the pretext that 69% reservation cannot be implemented.

    VCK condemns this grave injustice. We have given a representation to the Higher Education Dept in this regard. pic.twitter.com/054YbfaMTe

    — Thol. Thirumavalavan (@thirumaofficial) February 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனால் இந்தப் படிப்பை மட்டுமே நம்பியிருந்த 45 மாணவர்களின் இந்த கல்வியாண்டு கேள்விக்குறியாகியுள்ளது. இதில் அரசு உடனே தலையிட்டு தீர்வுகாணவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வாவிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இடஒதுக்கீடு பிரச்சினையால் நிறுத்தப்பட்ட நாட்டின் பழமையான பயோடெக் படிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.